தரணியில் உன் புகழ் நிலைக்குமையா!!!
வங்காளக் கரையோரம் நீ பிறந்தாய் -- ஐயா
வறுமையிலும் வாடாமல் நீ வளர்ந்தாய்!
அக்னிச்சிறகுகள் நீ படைத்தாய் -- ஐயா
அனைவரின் மனதிலும் இடம் பிடித்தாய்!
கனவுகள் பல காண நீ அழைத்தாய் -- ஐயா
இளைஞர் கூட்டத்தை ஒருங்கிணைத்தாய்!
தூங்கிய இந்தியாவை தூக்கிவிட்டாய் -- ஐயா
தூங்கவிடா கனவுகளை காண வைத்தாய்!
பொக்ரானில் அணுகுண்டு நீ வெடித்தாய் -- ஐயா
பாரினில் இந்தியாவை மதிக்க வைத்தாய்!
ஏவுகணை எய்திடவே தினம் உழைத்தாய் -- ஐயா
எதிரிகளை அதனாலே அடக்கி வைத்தாய்!
என்றுமே எளிமையாய் நீ இருந்தாய் -- ஐயா
எல்லார்க்கும் வழிகாட்டி நீ நடந்தாய்!
விருதுகள் வாங்கி நீ குவித்தாய் -- ஐயா
விளம்பரம் அதைத்தானே நீ தவிர்த்தாய்!
தமிழாலே அமுதுகள் நீ படைத்தாய் -- ஐயா
தன்மானம் பெரிதென்றே நீ நினைத்தாய்!
ஆசானாய் இருக்கவே ஆசைப்பட்டாய் -- ஐயா
அரங்கத்தில் பேசியே மூச்சை விட்டாய்!
தள்ளாத வயதிலும் ஓய்வறியாய் -- ஐயா
தரணியில் உன் புகழ் நிலைக்குமையா!!!
வங்காளக் கரையோரம் நீ பிறந்தாய் -- ஐயா
வறுமையிலும் வாடாமல் நீ வளர்ந்தாய்!
அக்னிச்சிறகுகள் நீ படைத்தாய் -- ஐயா
அனைவரின் மனதிலும் இடம் பிடித்தாய்!
கனவுகள் பல காண நீ அழைத்தாய் -- ஐயா
இளைஞர் கூட்டத்தை ஒருங்கிணைத்தாய்!
தூங்கிய இந்தியாவை தூக்கிவிட்டாய் -- ஐயா
தூங்கவிடா கனவுகளை காண வைத்தாய்!
பொக்ரானில் அணுகுண்டு நீ வெடித்தாய் -- ஐயா
பாரினில் இந்தியாவை மதிக்க வைத்தாய்!
ஏவுகணை எய்திடவே தினம் உழைத்தாய் -- ஐயா
எதிரிகளை அதனாலே அடக்கி வைத்தாய்!
என்றுமே எளிமையாய் நீ இருந்தாய் -- ஐயா
எல்லார்க்கும் வழிகாட்டி நீ நடந்தாய்!
விருதுகள் வாங்கி நீ குவித்தாய் -- ஐயா
விளம்பரம் அதைத்தானே நீ தவிர்த்தாய்!
தமிழாலே அமுதுகள் நீ படைத்தாய் -- ஐயா
தன்மானம் பெரிதென்றே நீ நினைத்தாய்!
ஆசானாய் இருக்கவே ஆசைப்பட்டாய் -- ஐயா
அரங்கத்தில் பேசியே மூச்சை விட்டாய்!
தள்ளாத வயதிலும் ஓய்வறியாய் -- ஐயா
தரணியில் உன் புகழ் நிலைக்குமையா!!!
