வெந்ததைத் தின்று - நித்தம்
வேதனைச் சுழலில் சுழன்று
வேடிக்கையாய்
வினோத செயல்கள் செய்து
சுயநலமாய்
சுருங்கிய உள்ளம் கொண்டு
படைத்தவனுக்கே
பணத்தை காணிக்கையாக்கி
வரங்கள் பல கேட்கும்
விளங்காத விந்தை மனிதரே!!!
உம்மிடம், தெய்வம் பேச நினைத்தால்
இப்படித்தான் இருக்குமோ???
இருக்கையில் கொடுத்திடு - பிறரை
கெடுப்பதை மறந்திடு
இறக்கையில் வந்திடும்
கொடுத்ததும் கெடுத்ததும்!!!
இதுவே உண்மை -- அதை
உணர்வது மேன்மை!
